சென்டாக் மூலம் சேர்ந்த மாணவர்களிடம் கல்விக் கட்டணம் கேட்டு, கல்லுாரிகள் வற்புறுத்தக்கூடாது என, முதல்வர் ரங்கசாமி கூறினார். காமராஜர் கல்வி நிதியுதவி திட்டத்தின் கீழ் சென்டாக் மூலம் தேர்வாகி, மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லுாரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க, 2015--16ம் நிதியாண்டில் ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டது. அதில், ஏற்கனவே ரூ.26.56 கோடி வழங்கிய நிலையில், ரூ.13.43 கோடி நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் நேற்று நடந்தது.
439 மருத்துவ மாணவர்களுக்கான தொகை ரூ.9.84 கோடியை, ஏழு மருத்துவ கல்லூரிகளுக்கும், 1,440 பொறியியல் மாணவர்களுக்கான தொகை ரூ.3.59 கோடியை 12 பொறியியல் கல்லூரிகளுக்கும் முதல்வர் ரங்கசாமி வழங்கினார். முதல்வர் ரங்கசாமி கூறுகையில், ஆண்டு தோறும் குறித்த காலத்தில் மாணவர்களுக்காக சென்டாக் நிதியை அரசு வழங்கி வருகிறது. சென்டாக் மூலம் தேர்வான மாணவர்களிடம், கட்டணம் கேட்டு, கல்லுாரிகள் வற்புறுத்தக்கூடாது என்றார். அமைச்சர் சிவா, உயர்க்கல்வித்துறை இயக்குனர் முகமது மன்சூர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment