தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) சார்பில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட, ரூ.7500 மதிப்பிலான புத்தகங்களின் உண்மை மதிப்பு ரூ.ஆயிரம் கூட இருக்காது என சர்ச்சை எழுந்துள்ளது.
ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், ஆறு முதல் 9ம் வகுப்பு வரை அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் பள்ளி மானியமாக வழங்கப்படுகிறது. இதில், பள்ளி நுாலகங்களுக்கு ரூ.7500க்கு புத்தகங்கள் வாங்க அத்திட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும், பல நிறுவனங்கள் பெயரில், 32 புத்தகங்கள் கொண்ட கட்டு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடன் ரூ.7500க்கான கொட்டேஷன், ரசீதும் அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால், இப்புத்தக மொத்த மதிப்பே ரூ.ஆயிரம் கூட இருக்காது என சர்ச்சை எழுந்துள்ளது.
தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது:
ஆண்டுதோறும் பள்ளி நுாலகங்களுக்கு தேவையான புத்தகங்கள் விவரத்தை அதிகாரி களுக்கு அனுப்புகிறோம். ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அனுப்பும் புத்தகங்களை தான் நாங்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. புத்தகங்களுடன் தான் கொட்டேஷன், ரசீதும் அனுப்புகின்றனர். இவற்றில், குறைந்த பக்கமுள்ள ஐந்து வகை காமிக்ஸ் புத்தகம் விலை தலா ரூ.550 என குறிப்பிடப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியல் பாட புத்தகங்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.150க்குள் தான் உள்ளது. இவற்றால் மாணவர் களுக்கு பயன் இல்லை, என்றனர்.
தமிழ் - 2 ஆங்கிலம் - 30 :பள்ளிகளுக்கு வந்துள்ள 32ல், 30 புத்தகங்கள் மெட்ரிக் பள்ளிகளுக்கான ஆங்கில புத்தகங்கள். சமச்சீர் கல்வி முறை அமல்படுத்துவதற்கு முன் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களே இந்த ஆண்டும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment