''அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை அழைத்து பேசாதது கண்டனத்திற்கு உரியது,'' என சங்க மாநிலத் தலைவர் மோசஸ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: கடந்த 2003ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் 'தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது. பின், காங்., ஆட்சியில் 2011ல் சட்டமாக இயற்றப்பட்டது.
இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி 16 பேராட்டங்களை நடத்தி உள்ளோம். எங்களிடம் விவாதம் நடத்தாமல் மற்ற சங்கங்களை அழைத்துப் பேச அரசு நினைப்பது பழிவாங்கும் நடவடிக்கை. இது, கண்டனத்துக்கு உரியது, என்றார்.
No comments:
Post a Comment