சாலை விபத்துகள் அதிகம் நடைபெறுவதற்குக் முக்கியக் காரணம் சாலைகளில் சரியான இடங்களில் வேகத்தடை இல்லாததே. இதை உணர்ந்த மாணவர்கள் தானாக இயங்கும் வேகத்தடை கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில், பழைய பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கிட்டதட்ட 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன்று வருகின்றனர். அதே பள்ளியில் பயின்று வரும் சவுந்தர்யா மற்றும் ஜீவா ஆகியோர் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்குடன் தானியங்கி வேகத்தடை கருவியை உருவாக்கியுள்ளனர்.
மேலும், இந்த கருவி மாவட்ட அளவில் நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. கண்காட்சிக்கு வந்திருந்த மக்களை இக்கருவி வெகுவாக கவர்ந்தது. இக்கருவியை வடிவமைத்து உருவாக்கிய மாணவர்கள், இந்தக் கருவியை மேம்படுத்தவும், அதனை நடைமுறையில் பயன்படுத்தவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அப்பள்ளி ஆசிரியர் கூறும்போது, “மாணவர்களை அறிவியல் ரீதியாக சிந்திக்கவைத்து, ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்தி, அவர்களிடம் ஒளிந்து கிடக்கும் திறமைகளை வெளிகொணர்வதே எங்களுடைய பள்ளியின் நோக்கம்” என்றார்
No comments:
Post a Comment