''வழக்குகள் முடிவுக்கு வந்தால், விரைவில் தகுதித் தேர்வு நடத்தப்படும்,'' என, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ராஜராஜேஸ்வரி தெரிவித்தார். மதுரையில் அவர் கூறியதாவது: மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் காலியாக உள்ள, 272 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, செப்., 17ல் தேர்வு நடக்கிறது. இதற்காக சென்னை, வேலுார், கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் பின், அரசு பொறியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கும், அரசு பள்ளிகளில், 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வையும் நடத்த, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்து வருகிறது.
வழக்குகள் நிலுவையில் உள்ளதால், மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முடியவில்லை. வழக்குகளை ஒருங்கிணைத்து, ஒரே வழக்காக நடத்த, உச்ச நீதிமன்றம் உத்-தர-விட்டுள்ளது. இவ்வழக்கு, வரும், 13ல் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வருகிறது. அப்போது, அரசின் கொள்கை முடிவு தெரிவிக்கப்படும்; இதன்பின், டி.இ.டி., தேர்வு நடத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment