ஒரே வாக்குச்சாவடியில், ஒரே துறையைச் சேர்ந்த பணியாளர்களை வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்ககூடாது என, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனத்தில் குழப்பம் ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் வகையில் சில விதிமுறைகளை கடைபிடிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர் நிலை 1ல் மாநில அரசு பணியில் உதவியாளர் தகுதி அல்லது அவர்கள் சம்பள விகிதத்திற்கு குறையாத பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
வாக்குப்பதிவு அலுவலர் நிலை 2,6ல் அலுவலக உதவியாளர் தகுதி அல்லது அவர்கள் சம்பள விகிதத்திற்கு குறையாத பணியாளர்கள், வாக்குப்பதிவு அலுவலர் நிலை 3,4,5ல் இளநிலை உதவியாளர் தகுதி அல்லது அவர்கள் சம்பள விகிதத்திற்கு குறையாத பணியாளர்களை நியமிக்க வேண்டும். போலீஸ், மருத்துவம், மின்சாரம், குடிநீர் வழங்கல், பால்பண்ணை போன்ற துறை பணியாளர்களை நியமிக்க கூடாது.
அரசியல் சார்புடையவர் என அறியப்பட்டவர், முந்தைய தேர்தல்களில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டவர், வேட்பாளரின் உறவினர் ஆகியோரை பணியமர்த்த கூடாது.
அதிக வாக்காளர்கள் அல்லது பர்தா அணிந்த இஸ்லாமிய பெண்கள் நிறைந்த பெண் வாக்குச்சாவடிகளில், அடையாளம் காண்பதற்காக ஒன்று அல்லது 2 பெண் வாக்குப்பதிவு அலுவலர்களை நியமிக்க வேண்டும்.
மேலும் ஒரே வாக்குச்சாவடியில் ஒரே துறைச் சேர்ந்த பணியாளர்கள் நியமித்தால் கூட்டுச் சேர வாய்ப்புள்ளது. இதனால் வெவ்வேறு துறை பணியாளர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். இவ்வாறு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment