Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, September 19, 2016

    'எலக்ட்ரானிக் சிப்' பொருத்தியஏ.டி.எம்., கார்டு: ரிசர்வ் வங்கி கெடு

    பாதுகாப்பு அம்சம் உள்ள, 'எலக்ட்ரானிக் சிப்' பொருத்திய, 'ஏ.டி.எம்., கார்டு' வழங்குவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க, ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது. வாடிக்கையாளர்களுக்கு, 'மேக்னடிக் ஸ்டிரைப்' என்ற, காந்தப் பட்டையுடன் கூடிய, ஏ.டி.எம்., கார்டுகளை, வங்கிகள் வினியோகித்துள்ளன. வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு கருதியும், 'கிரெடிட்' மற்றும், 'டெபிட் கார்டு' மோசடிகளை தடுப்பதற்காகவும், அந்த கார்டுகளுக்கு பதிலாக, சிறிய, 'எலக்ட்ரானிக் சிப்' பொருத்தப்பட்ட, பாதுகாப்பான கார்டுகளை, வங்கிகள் வழங்க வேண்டும் என, 2015 மே மாதத்தில், ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. 


    பல தனியார் வங்கிகள், இத்தகைய கார்டுகளை, வாடிக்கையாளர்களுக்கு வழங்கி உள்ளன. தேசிய வங்கிகள், சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக, காலக்கெடுவை நீட்டிக்க கோரின; ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. வரும், 30ல் கெடு முடியும் நிலையில், அதை மேலும் நீட்டிக்க வங்கிகள் கோரின; அதை ஏற்க மறுத்து, ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள அறிக்கை: பாதுகாப்பு அம்சம் பொருந்திய, ஏ.டி.எம்., கார்டுகளை வழங்குவதற்கான காலக்கெடு இம்மாதம் வரை நீட்டிக்கப்பட்டது; இனியும் நீட்டிக்கப்பட மாட்டாது. அதனால், ஏற்கனவே கூறியபடி, 2018 துவக்கத்தில், 'சிப்' பொருந்திய ஏ.டி.எம்., கார்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
    Post a Comment