மாணவர்களுக்கு பாடம் போதிக்கும் வகையில், ஆசிரியர்கள் தங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என, கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தினார். பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் நடந்த ஆசிரியர் தின விழாவில், நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கி, கவர்னர் கிரண்பேடி பேசியதாவது:
காவல் துறை பணிக்கு வருவதற்கு முன்பு, கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்தேன். மாணவர்களின் வாழ்வில் ஆசிரியர்களே மிகச்சிறந்த முன்னுதாரணமாக உள்ளனர்.
மாணவர்களுக்கு தற்போதைய கல்வி வளர்ச்சிக்கு ஏற்ப போதிக்க வேண்டுமெனில், நாள்தோறும் புதுப்புது விஷயங்களை ஆசிரியர்கள் கற்க வேண்டும். தங்களின் அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
தற்போது சில ஆசிரியர்கள் தங்களை மாணவர்களாக கருதுகின்றனர். சிலர் அவ்வாறு கருதுவதில்லை. எவ்வாறு பாடம் நடத்துவது, சிறந்த முறையில் தகவல்களை வெளிப்படுத்துவது குறித்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இது போன்ற பயிற்சிகளை அரசு தான் செய்ய வேண்டுமென்பதில்லை. சொந்த முயற்சியில் கற்றுக் கொள்ளலாம். நாள்தோறும் தெரிந்துகொள்ளும் புதுப்புது விஷயங்களை, மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். அறிவை வளர்க்க புத்தகம் தான் படிக்க வேண்டும் என்றில்லை, இணையதளத்தில் அனைத்து விஷயங்களையும் படிக்கலாம்.
மாணவர்களையும் இணையதளம் மூலம் படிக்க அறிவுறுத்த வேண்டும். கல்வி முறை மற்றும் கற்பிக்கும் முறையை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். இன்னும் சில வாரங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் பேசிானர்.
No comments:
Post a Comment