டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால், பள்ளிகளில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்ட அறிக்கை:
பள்ளி வளாகத்தை சுத்தமாக, தண்ணீர் தேங்காத வண்ணம் பராமரிக்க வேண்டும். குடிநீர் தொட்டி, கழிவறைகளை முறையாக சுத்தம் செய்வது அவசியம். வகுப்பறையில், குப்பைகள் தேங்காமல், உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.
தண்ணீர் தேங்குமாறு உள்ள, பூந்தொட்டிகள், பிளாஸ்டிக் பைகள், கட்டுமான பொருட்கள் ஆகியவற்றை அகற்ற வேண்டும். கைகளை கழுவிய பின், மாணவர்கள் சாப்பிட அறிவுறுத்த வேண்டும். குடிநீரை காய்ச்சி குடித்தல், சோப்பு போட்டு கை கழுவுதல், பாதுகாப்பான உணவுகளை சாப்பிடுமாறு, எடுத்துரைக்க வேண்டும்.
கடுமையான காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் அறிந்தால், அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில், சிகிச்சை அளிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment