Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, September 5, 2016

    விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

    ஆவணியில் சதுர்த்தி கொண்டாட காரணம்
    ஒரு காலத்தில் ஆவணியே மாதங்களில் முதன்மையானது என்பர். கேரளத்தில் ஆவணியே (சிம்ம மாதம்) கொல்லம் ஆண்டின் (மலையாள புத்தாண்டு) முதல் மாதமாக உள்ளது. இம்மாதத்தில் தான் முழு முதற்கடவுளான விநாயகப்பெருமான் அவதரித்தார் என்பதால் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் தான், நவக்கிரக முதல்வரான சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்தில் ஆட்சி பெறுகிறார்.


    சிலை வழிபாடு

    கருங்கல், தங்கம், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் தலியவைகளால் விநாயகர் சிலை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம்.


    விநாயகர் சதுர்த்தி பூஜை முறை

    விநாயகர் சதுர்த்தியன்று வாசலில் கோலமிட்டு மாவிலை, வாழை தோரணம் கட்ட வேண்டும். ஒரு இலையில் பச்சரிசியைப் பரப்பி, அதில் மஞ்சள், சந்தனம் அல்லது களிமண்ணில் செய்த விநாயகப்பெருமானின் சிலை வைக்க வேண்டும். (சிலை இல்லாதவர்கள் படம் வைக்கலாம்) விநாயகரின் திருமேனியில் வெடிப்பு, விரிசல், குறை ஏதும் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். உடைந்த கண்ணாடிகளையுடைய படங்களையும் உபயோகிக்கக் கூடாது.
    அவல்,பொரி, கடலை, மோதகம், சுண்டல் படைத்து, சீதக்களப எனத் தொடங்கும் விநாயகர் அகவல் மற்றும் காரியசித்தி மாலை பாடல்களைப் பாட வேண்டும். துாப, தீபங்கள் ஏற்றி
    வழிபாடு செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தி நாளில் மதியம் ஒருவேளை உணவு உண்டு, இரவில் பால், பழம், மோதகப் பிரசாதம் மட்டும் சாப்பிட வேண்டும். பூஜைக்கு முன்னதாக
    சந்திரனைப் பார்த்தல் கூடாது. ஆனால், பூஜை முடிந்த பின் சந்திரனை வணங்குவதால் தோஷமில்லை. சிலைகளை ஆறு, குளம், ஏரிகளில் கரைத்து விட வேண்டும். சிறிய சிலைகளை வீட்டில் தண்ணீரிலேயே கரைத்து மரங்களின் வேரில் விட்டு விடலாம். மண்ணில் பிறக்கும் மனிதன் இந்த மண்ணுக்கே சொந்தம் என்பது இந்த வழிபாட்டின் தத்துவம்.


    குட்டுங்க.... தலையில் குட்டுங்க...
    விநாயகர் முன் நின்றவுடன் தலையில் குட்டிக்கொள்வது மரபு. ஏன் இப்படி குட்ட வேண்டும்
    என்பதற்கு கதை ஒன்று உள்ளது. இமயமலையில் இருந்து அகத்தியர் கமண்டலத்துடன் வந்து
    கொண்டிருந்தார். அப்போது காக உருவெடுத்து வந்த விநாயகப் பெருமான் கமண்டலத்தில் இருந்த நீரை தட்டி விட்டார். கமண்டல நீர் ஆறாக ஓடிவந்தது. காகம் தட்டி விரிந்து (பரந்து) ஓடியதால் காவிரி என்ற பெயர் அந்நதிக்கு உண்டானது. கமண்டலத்தை தட்டி விட்ட காகத்தை அகத்தியர் திரும்பிப் பார்த்தார். அதைக் காணவில்லை. காகம் நின்ற இடத்தில் ஒரு சிறுவன் நின்றான். செய்வதையும் செய்துவிட்டு முனிவரைப் பார்த்துச் சிரித்தான். கோபமடைந்த அகத்தியர் அச்சிறுவனின் தலையில் குட்ட முயன்றார். உடனே அவன் விநாயகப் பெருமானாக அகத்தியர் முன் நின்றான். குட்ட முயன்ற தவறுக்காக வருந்திய அகத்தியர், அப்படியே தன் தலையில் குட்டிக் கொண்டு மன்னிக்குமாறு வேண்டினார். இதன் காரணமாக நாம் அறிந்தும்
    அறியாமலும் செய்யும் தவறுக்காக, விநாயகரிடம் மன்னிப்பு கேட்டு குட்டிக்கொள்ளும் பழக்கம்
    வந்தது.


    ஏழு முக்கிய விரதங்கள்
    1. வெள்ளிக்கிழமை விரதம்  
    வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளி துவங்கி வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து இருத்தல். இந்த விரதத்தால் குபேரனைப் போல் செல்வந்தனாக வாழலாம்.

    2. குமார சஷ்டி விரதம்
     கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறை சஷ்டி திதி வரை 21 நாட்கள். இந்த விரதம் தொழில், வியாபாரம், பணிகள் வெற்றி பெற உதவும்.

    3. சங்கடஹர சதுர்த்தி விரதம்
     மாசி மாதம் செவ்வாய்க்கிழமையும், தேய்பிறை சதுர்த்தியும் சேர்ந்து வரும் நாளில் துவங்கி அடுத்த ஆண்டு மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி வரை அனுஷ்டித்தல், இந்த விரதத்தால் தீராத
    கஷ்டங்களெல்லாம் தீர்ந்து விடும்.

    4. நவராத்திரி விரதம்
     விநாயகர் சதுர்த்தி முதல் 9 நாட்கள் தொடர்ந்து விரதமிருந்து, மாலை விளக்கேற்றியதும்
    அருகம்புல் மாலையிட்டு வணங்குதல். இதனால் குடும்ப ஒற்றுமை மேம்படும்.

    5. வெள்ளிப்பிள்ளையார் விரதம்
     வெள்ளிக்கிழமைகளில் காலை 4:30 - 6:00 மணிக்குள் விநாயகருக்கு பூஜை செய்தல், இது பெண்களுக்கு மட்டுமே உரியது. தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.

    6. செவ்வாய் பிள்ளையார் விரதம்
     தை செவ்வாய், ஆடி செவ்வாயில் துவங்கி 7,9,11 வார செவ்வாய் கிழமைகளில் ஆண்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் அனுஷ்டிப்பது. இதனால் செல்வம் பெருகும்.

    7. வளர்பிறை சதுர்த்தி விரதம்
     ஆவணிமாதம் விநாயகர் சதுர்த்தி முதல் அடுத்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வரை வளர்பிறைகளில் தொடர்ந்து அனுஷ்டிப்பது. நினைத்ததெல்லாம் நடக்க இதை அனுஷ்டிப்பர்.


    விநாயகர் சதுர்த்தி வழிபாடு

    விநாயகர் சதுர்த்தியான இன்று நீங்கள் விநாயகர் முன் அமர்ந்து சொல்ல வேண்டிய பிரார்த்தனை இது. இதைச் சொல்வதால் உயர்ந்த புகழ்
    ஏற்படும். நல்ல குழந்தைகள் அமைவார்கள். எதையும் சாதிக்கும் ஆற்றல் கிடைக்கும்.
    v கையில் மகிழ்ச்சி பொங்க
    மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே! வணங்குவோருக்கு, என்றும் எந்நேரமும் பிறவாவரம் தர காத்திருக்கும் குணநிதியே! பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய
    சந்திரனை தலையில் சூடியவனே! உலகத்தைக் காப்பதை விளையாட்டாகச்
    செய்பவனே! ஒப்பில்லாத உயர்ந்த தயாளகுணம்உள்ளவனே! கஜாமுகாசுரனை வென்றவனே! கெட்டதை அழித்து நல்லதைச் செய்து என்னைக் காக்கும் விநாயகனே! உனக்கு என் வணக்கம்.

    v இளஞ்சூரியனைப் போல்
    உள்ளத்தில் ஒளி கொண்டவனே! பாவங்களைக் களைந்து சொர்க்கத்தைத் தருபவனே! தேவர்களுக்கு எல்லாம் தேவனே! கருணை மிக்கவனே! யானை முகத்தோனே! அளப்பரிய
    சக்தியால் அளவற்ற செல்வத்தை தருபவனே! எல்லையில்லாத பரம்பொருளே! விநாயகப்
    பெருமானே! உன் திருவடிகளை சரணடைந்து அருளை வேண்டுகிறேன். உனக்கு
    என் நமஸ்காரம்.

    v உலக மக்களுக்கு நலமும்
    மங்களமும் தருபவனே! நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனநிறைவைத் தருபவனே! நாங்கள் செய்யும் குற்றங்களைக் கூட குணமாகக்கொள்பவனே! ஓம் என்ற மந்திர வடிவினனே! நிலையானவனே! கருணாகரனே! சகிப்புத்தன்மை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களை தருபவனே! உலகத்தாரால் புகழ்ந்து போற்றப்படுபவனே! உனக்கு என் நமஸ்காரம்.

    v திரிபுரம் என்னும் அசுரர்களின் மூன்று கோட்டைகளை எரித்த சிவபெருமானுடைய மூத்த
    புத்திரனே! எங்கள் துன்பத்தை தீர்த்து வை. துாய்மையான மனதைக் கொடு. உலகம் அழியும் காலத்திலும் உன் பக்தர்களை ஓடோடி வந்து காக்க வருபவனே! உண்மை வெற்றி பெற துணை
    நிற்பவனே! கன்னத்தில் மதநீர் பொழியும் கஜமுகனே! முதலும் முடிவுமில்லாத பரம்பொருளே! உன் திருவடிகளில் என் தலை வைத்து வணங்குகிறேன். எம்பெருமானே! நீ வாழ்க, வாழ்க!

    v பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை உடையவனே!
     ஒற்றைக் கொம்பனே! காலனுக்கே காலனான சிவபெருமானின் மைந்தனே! ஆதியும் அந்தமும் இல்லாதவனே! கஷ்டங்களை நீக்குபவனே! யோகிகளின் நெஞ்சில் வசிக்கும் ஞானப்பொருளே! யானை முக கணேசா! காலமெல்லாம் உன்னையே நினைத்து, வணங்கி
    வருகிறேன். வள்ளலே! வல்லப கணபதியே! உன் திருப்பாதங்களில் சரண மடைகிறேன். விநாயகனே! சரணம்..சரணம்...சரணம்.

    அருகம்புல்லில் அரும்பிய கதை..

    சுலபன் என்ற மன்னன் காளையாகவும், அவனது மனைவி சுபத்திரை, மாடு மேய்க்கும்
    பெண்ணாகவும், மன்னனைப் பார்க்க வந்த ஒரு அந்தணர் கழுதையாகவும் மாறும் வகையில் சாபம் பெற்றனர். மூவரும் எதிர்பாராதவிதமாக சந்திக்க நேர்ந்தது. அன்று பெரும் காற்றும்
    மழையும் வீசியது. சுபத்திரை தனது மாடுகளுக்காக அருகம்புல் அறுத்து கட்டி வைத்திருந்தாள். மழை அதிகரிக்கவே அங்கே உள்ள ஒரு விநாயகர் கோவிலில் ஒதுங்கினாள்.
    அதே கோவிலில் மாடும் ஒதுங்கியது. சுபத்திரை வைத்திருந்த அருகம்புல்லை மாடு தின்றது. அதன் வாயிலிருந்து சில புற்கள் காற்றில் பறந்து சென்று அங்கிருந்த விநாயகர் சிலை மீது
    விழுந்தன. அப்போது அங்கே வந்த கழுதையை மாடு தள்ளிவிட்டது. கழுதை தனது பின்னங்காலால் மாடை உதைத்தது. உதை அந்த புல்கட்டில் பட்டு மேலும் சில அருகம்புற்கள் விநாயகர் மீது விழுந்தன. தான் கஷ்டப்பட்டு அறுத்த புல்லை மாடும் கழுதையும் சேர்ந்து துவம்சம் செய்ததைக் கண்ட சுபத்திரை, அவற்றை விரட்டி விட்டு புல்கட்டை துாக்கினாள். அப்போது சிதறிய சில புற்கள் விநாயகர் மீது விழுந்தன.
    இவ்வாறு மூவரிடமிருந்தும் புற்கள் பறந்து விநாயகர் சிலை மீது விழுந்ததால் மூவரும் சாபவிமோசனம் அடைந்தனர். வெறும் புல் துண்டுகளே சாப விமோசனம் அளிக்கும் அளவிற்கு சக்தி வாய்ந்தவை என்றால், விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்தால், நம் பாவங்களெல்லாம் தீயிலிட்ட பஞ்சாய் காணாமல் போய்விடுமல்லவா! அதனால் தான் விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவிக்கிறோம்.

    தொலைந்ததை மீட்டு தருபவர்

    தேவாரம் பாடிய சுந்தரர், தன் நண்பர் சேரமான் பெருமாள் நாயனாரிடம் பொன்னும் பொருளும் ஏராளமாகப் பெற்றுக் கொண்டு, ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். சுந்தரருடன் திருவிளையாடல் புரிய திருவுளம் கொண்டார் சிவன். சிவகணங்களை வேடர் வடிவில் அவரிடம் அனுப்பி, அவரிடமிருந்த பொன்னையும், பொருளையும் பறித்து மறைத்து வைக்கும்படி ஆணையிட்டார்.

    திருப்பூர் அருகிலுள்ள திருமுருகன்பூண்டி என்ற தலத்துக்கு சுந்தரர் சென்றபோது, பொருட்களை வேடர்களிடம் இழந்தார். இதுபற்றி சிவனிடம் முறையிட்டார். அங்கிருந்த விநாயகர்சுந்தரரை பெயர் சொல்லி கூப்பிட்டு, பொருளை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டி அருளினார். அதனால் இந்த விநாயகருக்கு கூப்பிடு விநாயகர் என்றும், காட்டிக்கொடுத்த விநாயகர் என்றும் சிறப்புப் பெயர் உண்டானது. பொருட்களை களவு கொடுத்தவர்கள் கூப்பிடு விநாயகரை வணங்கி, மீண்டும் கிடைக்க வேண்டுகின்றனர்.

    No comments: