கொல்லிமலை அரசு ஐ.டி.ஐ.,ல் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொல்லிமலை அரசு ஐ.டி.ஐ.,யில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, தகுதியானவர்களிடமிருந்து இன சுழற்சி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அலுவலக உதவியாளர் இரண்டு இடங்களுக்கு, 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பொது பிரிவில் முன்னுரிமையில் ஒரு இடமும், இரண்டாம் இடம் எஸ்.சி.ஏ., (ஆதரவற்ற விதவை) அல்லது எஸ்.சி.ஏ., (பெண்) விண்ணப்பதாரர்கள் மூலம் நிரப்பப்படவுள்ளது.
பணிமனை உதவியாளர், மின்பணியாளர் பிரிவில் உள்ள ஒரு பணியிடத்திற்கு என்.டி.சி.,/என்.ஏ.சி., சான்றிதழ் பெற்றவர்கள், பணிமனை உதவியாளர் பொருத்துனர் பதவிக்கு என்.டி.சி.,/என்.ஏ.சி., சான்றிதழ் பெற்ற எஸ்.சி.,- எஸ்.சி.ஏ., விதவை, ஆதரவற்ற விதவைகளும், பணிமனை உதவியாளர் பணியிடத்திற்கு, கம்மியர், டீசல் பிரிவில் தகுதி பெற்ற, மிகவும் பிற்பட்டோர் பிரிவில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
தகுதியானவர்கள் தங்களது விண்ணப்பத்தை பயிற்சி உதவி இயக்குனர், அரசினர் தொடர் அறிவுரை மையம், சேலம் - 7 என்ற முகவரிக்கு, வரும், 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கக் வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment