மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கல்வித் துறையில் ஆசிரியர்களாக பணிபுரிந்து மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கும், அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கும் சிறந்த தொண்டாற்றுபவர்களின் ஆசிரியர் பணியைப் பாராட்டும் விதமாக தமிழக அரசு சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
2015-16ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆரணி வட்டம், சத்தியவிஜயநகரம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் விஜயன், செய்யாறு வட்டம், பல்லி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நாராயணன், திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் ஜெயக்குமாரி, சாணாப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் பாலமணி, கீழ்ப்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி, புதுப்பாளையம் ஒன்றியம், நந்திமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சென்னம்மாள், துரிஞ்சாபுரம் வி.நம்மியந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளித் தலைமை ஆசிரியர் வெங்கடேசன், ஆனக்காவூர் ஒன்றியம், ஆனக்காவூர் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் தேன்மொழி, ஆரணி ஒன்றியம், மாமண்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சாந்தி, செய்யாறு ஒன்றியம், வடதண்டலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பால்ராஜ் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு சென்னையில் திங்கள்கிழமை நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment