ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின், 42வது ஆண்டு பொதுக்கூட்டம், மும்பையில் நேற்று நடைபெற்றது. அப்போது, ஆர்ஜியோ மொபைல் போன் சேவை, வரும், 5ம் தேதி துவங்க உள்ளதாக தெரிவித்தார் முகேஷ் அம்பானி. கூடவே, ஆர்ஜியோ சந்தாதாரர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளையும் பட்டியலிட்டார்.-முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்
1. மும்பை, டில்லியில், ‘ஆதார்’ அட்டையை ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் காண்பித்து, 15 நிமிடங்களில் சேவை பெறும் வசதி துவக்கம்
2. ஜியோ, ‘ஆப்ஸ்’ தொகுப்பு, டிச., இறுதி வரை இலவசம்
3. இந்தியாவிலேயே, முதன் முதலாக, அதிவிரைவான, 4ஜி எல்.டி.இ., தொழில்நுட்ப சேவை மட்டுமே வழங்கப்படும்
4. வர்த்தக ரீதியிலான ‘ஆர்ஜியோ’ சேவை, டிச., 31ல் துவங்கும்
5. மொத்தம் பத்தே பிளான்கள் தான்
6. சிக்கலான, மறைமுக கட்டணங்கள் எதுவும் இருக்காது
7. மாணவர்களுக்கு, 25 சதவீத கூடுதல் டேட்டா
8. டேட்டா கட்டணம்: 1 எம்.பி.,க்கு, 5 காசு அல்லது 1 ஜி.பி.,க்கு, 50 ரூபாய்
9. அனைத்து உள்ளூர் அழைப்புகள், ரோமிங் கட்டணம் இலவசம் (செப்., 5 முதல் டிச., 31 வரை)
10. 2017, மார்ச்சுக்குள், 10 கோடி சந்தாதாரர்கள் என இலக்கு
11. உலகில், மொபைல் பிராட்பேண்ட் வசதியில், 155வது இடத்தில் உள்ள இந்தியாவை, முதல் 10 இடங்களுக்குள் ஆர்ஜியோ, கொண்டு வரும்
ரிலையன்ஸ் நிறுவனம், 4ஜி குறித்து, கடந்த ஆண்டு அறிவித்தபோது, நான் எங்கள் குழுமத்தின் இயக்குனர்கள் குழுவிடம் சொன்னேன், ‘நாம் நம் வணிகத்தின் பாதையையே மாற்ற வேண்டியதிருக்கும்’ என்று, ரிலையன்ஸ் ஜியோ மூலம் பிராட்பேண்ட் உலகில் ஒரு புரட்சி துவங்கியுள்ளது.-ஆனந்த் மகிந்திரா, தலைவர், மகிந்திரா குழுமம்
No comments:
Post a Comment