Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, June 14, 2015

    'இலவச லேப் - டாப் இப்போதைக்கு கிடைக்காது'

    'தமிழக அரசு சார்பில், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் இலவச, 'லேப் - டாப்' வினியோகம் துவங்க, மேலும் சில மாதங்களாகும்' என, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 


    அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் இலவச, 'லேப் - டாப்'களை, மாநில அரசு வழங்கி வருகிறது. கடந்த கல்வியாண்டில், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில், சில பள்ளிகளில் மட்டும், 'லேப் - டாப்' வழங்கப்பட்டது.

    இதுகுறித்து, தகவல் தொழில்நுட்பத் துறையான, 'எல்காட்' வட்டாரங்கள் கூறியதாவது:
    'லேப் - டாப்' சப்ளை செய்வதற்கான நிறுவனத்தை, தேர்ந்தெடுத்துவிட்டாலும், அவர்களுடன் விலை குறைப்பு குறித்து பேசி வருகிறோம். மொத்தம், 10.5 லட்சம், 'லேப் - டாப்'கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன; ஒரு, 'லேப் - டாப்'க்கு, 50 ரூபாயை குறைத்தாலும், அரசுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகும்.

    அதற்காக, அந்த தனியார் நிறுவனத்திடம், தொடர்ந்து பேசி வருகிறோம். எனினும், அந்த நிறுவனம், 'லேப் - டாப்' சப்ளை செய்ய, குறைந்தது இரு மாதங்களாகும். தனியார் நிறுவனத்தின் சப்ளை துவங்கியதும், தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்கும், 'லேப் - டாப்' வழங்கப்படும்; எனவே, மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    No comments: