Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, June 11, 2015

    இன்று எம்.பி.பி.எஸ்., 'ரேண்டம்' எண் வெளியீடு

    தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, விண்ணப்பித்தோருக்கான, 'ரேண்டம் எண்' இன்று வெளியிடப்படுகிறது. தமிழகத்தில், ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரியையும் சேர்த்து, 20 அரசு மருத்துவ கல்லுாரிகள், ஒரு அரசு பல் மருத்துவ கல்லுாரி உள்ளன.
    2,655 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 100 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீடாக, 15 சதவீத இடங்கள் போக, மற்ற இடங்களுக்கு, மருத்துவக் கல்வி இயக்ககம், கலந்தாய்வு நடத்தி மாணவரை சேர்க்க உள்ளது. இதற்கு, 32,184 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்நிலையில், 'ரேண்டம் எண்' இன்று வெளியிடப்படுகிறது. பலர் ஒரே மாதிரியான, 'கட் - ஆப்', பிறந்த தேதி, பாடவாரியாக மதிப்பெண் என, எல்லாம் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்புண்டு. அப்படியான சூழலில், அவர்களில், யாரை முன்னிலைப்படுத்துவது என்பதற்கான, 'ரேண்டம்' எண், இன்று வெளியிடப்படுகிறது.பிளஸ் 2 மறு கூட்டலுக்கான முடிவுகள் குறித்த, 'சிடி' இன்று, பள்ளிக் கல்வித் துறை தர உள்ளது. இதைத் தொடர்ந்து, 14ம் தேதி, தர வரிசை பட்டியலை வெளியிடவும், 19ம் தேதி, முதற்கட்ட கலந்தாய்வை நடத்தவும், மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

    No comments: