Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, June 15, 2015

    எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு

    தமிழகத்தில், 20 அரசு மருத்துவக் கல்லூரிகளும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியும் உள்ளன. இவற்றில், மாநில ஒதுக்கீட்டிற்கு, 2,257 எம்.பி.பி.எஸ்., - 85 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. சுயநிதிக் கல்லூரிகளில், 580 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான, மாணவர் சேர்க்கை முதற்கட்ட கலந்தாய்வு, வரும் 19ம் தேதி துவங்குகிறது.பிளஸ் 2 மறுகூட்டல் முடிவு கள் குறித்த, 'சிடி'யை, பள்ளிக் கல்வித் துறை, 12ம் தேதி மருத்துவக் கல்வி இயக்கத்தில் வழங்கியது. 

    விண்ணப்பித்த, 32,184 பேரில், 1,300 மாணவர்களின் மதிப்பெண்கள் மாறிஉள்ளன. இதனடிப்படையில், இறுதி செய்யப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியல், மருத்துவக் கல்வி இயக்ககத்தில், இன்று மாலை வெளியிடப்படுகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணனும் பங்கேற்கின்றனர். தரவரிசைப் பட்டியல் விவரங்களை, www.tnhealth.org மற்றும் www.tn.gov.in என்ற இணையதளங்களில், மாணவர்கள் பார்க்கலாம்.

    No comments: