இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலர் விர்ஜேஷ் உபாத்தியாயா, தில்லியில் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக ஊழியர்கள் எழுப்பிய ஆட்சேபனைகளைப் புறக்கணித்துவிட்டு அந்தப் பரிந்துரைகளை அப்படியே ஏற்கும் மத்திய அரசின் முடிவு, எங்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. அதனால் தொழில்துறையில் அமைதி சீர்குலைந்தால், அதற்கு மத்திய அரசே பொறுப்பாகும்.
மேலும், குறைந்தபட்ச ஊதியத்துக்கும், அதிகபட்ச ஊதியத்துக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது. அதை மாற்றி, நாடு முழுவதும் தனியார் துறை உள்பட அனைத்து துறைகளிலும் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18,000-மாக அறிவிக்க வேண்டும்.
கடைகள் மற்றும் நிறுவனங்கள் மசோதா தொடர்பான வரைவு மசோதா கொண்டு வரப்பட்டு, தொழிற்சங்கங்களை கலந்தாலோசித்த பிறகே மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்திருந்தது. ஆனால், தற்போது மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் அந்த உறுதிமொழியை அரசு மீறிவிட்டது.
மத்திய அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வுக்கு அதிருப்தி தெரிவித்து, அடுத்த மாதம் 7ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பிஎம்எஸ் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். மேலும், வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள தேசியச் செயற்குழுவில், இந்த விவகாரம் தொடர்பாக வேலைநிறுத்தம் செய்வது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment