நாடு முழுவதும், 1.6 கோடி போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டு உள்ளதாகவும், அதனால், 10 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும் என்றும், மத்திய நிதித் துறை செயலர் அசோக் லவாஸா கூறியுள்ளார்.
டில்லியில் நேற்று, அசோக் லவாஸா, நிருபர் களிடம் கூறியதாவது: நாடு முழுவதும், 1.6 கோடி போலி ரேஷன் கார்டுகள்ஒழிக்கப்பட்டுள்ளன. இதனால், மத்திய அரசின் மானியத் தொகையில், 10 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும். மேலும், சமையல் காஸ்மானியத்தை, நேரடியாக, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத் துவதால், 14 ஆயிரத்து, 872 கோடி ரூபாயை, அரசு மிச்சப்படுத்தி உள்ளது.
நேரடி பணப் பட்டுவாடா திட்டம், :இந்தாண்டு இறுதிக்குள், மேலும், 150 திட்டங்களுக்கு நீட்டிக்கப்படும். மகாத்மா காந்தி ஊரகவேலைவாய்ப்புஉறுதித் திட்டத்தில், போலி வேலை அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால், 2015 - 16ம் நிதியாண்டில், 10 சதவீத தொகை மிச்சமாகி உள்ளது.
மத்திய அரசின் உதவித்தொகை வழங்கும் திட்டங் களில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்த, மத்திய அரசு விரும்புகிறது. எனவேமத்திய அரசின் அனைத்து துறைகளிலும் வழங்கப்படும், உதவித்தொகை திட்டங்கள், தேசிய உதவித்தொகை இணையதளம் மூலம் ஒருங்கிணைக்கப் படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment