மின் வாரிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வில், 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.தமிழ்நாடு மின் வாரியத்தில், 200 டைப்பிஸ்ட், 50 உதவி வரைவாளர் மற்றும், 25 இளநிலை தணிக்கையாளர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது. விண்ணப்பித்து இருந்த, 18 ஆயிரம் பேரில், 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'எழுத்துத் தேர்வை அண்ணா பல்கலை நடத்தியது. மூன்று பிரிவுகளில் தேர்வு நடந்ததால், ஒவ்வொரு பிரிவிலும், எத்தனை பேர் பங்கேற்றனர் என, கணக்கிடுவதில் தாமதமாகி விட்டது. 10 ஆயிரம் பேர் தேர்வு எழுதி இருப்பர்; முழு விவரம் இன்று தெரிய வரும்' என்றார்.
No comments:
Post a Comment