நோட்டீஸ் வழங்காமல் ஆசிரியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்ய கல்வித்துறை தடை விதித்துள்ளது. அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு ஊதியம் கணக்கிடும் போது, சிலருக்கு தவறுதலாக கூடுதல் ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த குளறுபடி தணிக்கையின் போது கண்டறியப்படுகிறது. இதையடுத்து கூடுதலாக வழங்கிய தொகையை சம்பந்தப்பட்ட அரசு ஊழியர், ஆசிரியரின் ஊதியத்தில் பிடித்தம் செய்ய உத்தரவிடப்படுகிறது.
திடீரென ஊதியத்தை பிடித்தம் செய்ய துறை அலுவலர் உத்தரவிடுவதால், சிலர் நீதி மன்றத்தில் தடையாணை பெறுகின்றனர். இதனால் கூடுதலாக வழங்கப்பட்ட தொகையை பிடித்தம் செய்ய முடியாமல் போய்விடுகிறது. இதையடுத்து 'தணிக்கை விபரம் குறித்து சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் வழங்கிய பின்பே, ஊதியத்தை பிடித்தம் செய்ய வேண்டும்,' என நிதித்துறை அனைத்து துறைகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அதன்படி ஆசிரியர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்ட தொகையை நோட்டீஸ் வழங்காமல் பிடித்தம் செய்யக்கூடாது என, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment