மத்திய அரசை கண்டித்து ஜூலை 11 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ள மத்திய அரசு ஊழியர்கள், அடுத்த நெருக்கடி கொடுப்பது குறித்து ஜூன் 25ல் புதுடில்லியில் ஆலோசிக்கின்றனர். ஊதிய உயர்வு உட்பட 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை 11 முதல் ரயில்வே, தபால், ராணுவம் உட்பட மத்திய அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
மத்திய அரசுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.வேலைநிறுத்தத்திற்கு முன்னோட்டமாக 5 லட்சம் ஊழியர்கள், ஜூன் 24ம் தேதி பார்லிமென்ட் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதில், மத்திய அரசு ஊழியர்கள் சங்கங்களின் தலைவர்கள் சிவகோபால் மிஸ்ரா, கண்ணையா, குட்டி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைதொடர்ந்து, மத்திய அரசுக்கு எவ்வகையில் நெருக்கடி தருவது என்பது குறித்து ஆலோசிக்க, புதுடில்லியில் ஜூன் 25ம் தேதி மத்திய அரசு ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழு ஆலோசிக்க உள்ளதாக நிர்வாகிகள்தெரிவித்தனர்.
No comments:
Post a Comment