கொடைக்கானல் பஸ் ஸ்டாண்டு பகுதியில் உள்ள மதுபானக் கடையில், மதுரையைச் சேர்ந்த பள்ளி மாணவருக்கு மது விற்ற ஊழியரிடம், போலீசார் விசாரணை நடத்தினர். மதுரையைச் சேர்ந்த, 15 வயதுக்கு உட்பட்ட, ஆறு மாணவர்கள் நேற்று, கொடைக்கானல் வந்தனர். பள்ளிக்கு செல்வதாகக் கூறி, வீட்டுக்குத் தெரியாமல் சீருடையுடன் வந்தனர். ஒரு மாணவன் வீட்டிலிருந்த ஏ.டி.எம்., கார்டையும் எடுத்து வந்திருந்தார்.
அதன் மூலம் பணத்தை எடுத்து, நண்பர்கள் அனைவருக்கும் புதிய உடைகளை வாங்கி கொடுத்தார். பின், சீருடையை கழற்றி, அப்புதிய ஆடையை அணிந்த அவர்கள், பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வந்தனர். அங்குள்ள மதுபானக் கடையில் மது வாங்கி ஒரு மாணவர் குடித்தார். அவர் தள்ளாடிக்கொண்டு உளறியபடி வந்தார். பள்ளி மாணவர் போல தெரிந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதியினர் விசாரித்தனர். அதில் அவர் மது அருந்தியது தெரிந்தது. பொதுமக்கள், ஆறு பேரையும் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார், மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்க தடை உள்ளது. இதனால் மதுபானக் கடை ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment