Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, June 22, 2016

    பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வாங்கக் குவிந்த மாணவர்கள்: இன்று முதல் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு தொடக்கம்

    மதுரையில் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றுகள் திங்கள்கிழமை முதல் விநியோகிக்கப்பட்டதையடுத்து அவற்றை வாங்க மாணவர்கள் குவிந்தனர். மேலும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு அலுவலக பதிவு தொடங்குகிறது.


    பிளஸ் 2 தேர்வு முடிவுக்குப் பின்னர் தேர்ச்சியடைந்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் பிளஸ் 2 மதிப்பெண் சான்றை இணையத்தில் நகல் எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்துள்ளனர். கல்லூரிகளில் சேரும் போது பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்று அவசியம் என்பதால், கல்வித்துறை சார்பில் திங்கள்கிழமை முதல் அந்தந்தப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மூலம் மதிப்பெண் சான்றுகள் விநியோகிக்கப்பட்டன.

    மதுரையில் மாநகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 மதிப்பெண் பெறுவதற்காக பெற்றோர்களுடன் மாணவ, மாணவியர் வந்ததால் கூட்டம் அலைமோதியது.

    இன்று முதல் பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு தொடக்கம்: இந்நிலையில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு செவ்வாய்க்கிழமை முதல் பள்ளிகள் மூலம் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு தொடங்குகிறது.


     இதுகுறித்து மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து திங்கள்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: கணினி மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாணவர்களுக்கு பதிய h‌t‌t‌p‌s:​‌t‌n‌v‌e‌l​a‌i‌v​a​a‌i‌p‌p‌u.‌g‌o‌v,​‌i‌n​E‌m‌p‌o‌w‌e‌r என்ற இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் புதிதாக பதிந்தால் குடும்ப அடையாள அட்டையை அவசியம் கொண்டு வரவேண்டும். ஏற்கெனவே பத்தாம் வகுப்பு பதிவு செய்திருந்தாலும், குடும்ப அடையாள அட்டையுடன், பதிவு அட்டையின் அசலையும் கொண்டு வரவேண்டும். பிளஸ் 2 தேர்ச்சி பெறாதவர்கள் பதியத் தேவையில்லை.

     பதிபவரின் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் உள்ள பெயரும், குடும்ப அடையாள அட்டையில் உள்ள பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும். மனுதாரரின் தற்போதைய முகவரியும், குடும்ப அடையாள அட்டையில் உள்ள முகவரியும் ஒன்றாக இருக்க வேண்டும். பதிவு முடிந்ததும், அதற்கான ஒப்புகைச் சீட்டை சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர் பெற்றுக் கொள்ள வேண்டும்.

     பதிவுக்கான மேலும் விவரங்களுக்கு மதுரை வேலை வாய்ப்பு துணை இயக்குநர் 9443020462 மற்றும் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் 9500765372, 9597895042, 9944185539 ஆகிய செல்லிடப்பேசிகளிலும், அலுவலக தொலைபேசி 0452-2566022 ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

    பிளஸ் 1 வகுப்புகள்: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்த பின்னர் வரும் 23 ஆம் தேதி பிளஸ் 1 வகுப்புகள் தொடங்கவுள்ள நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள 196 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு வரும் 22 ஆம் தேதிக்குள் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    No comments: