மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் விரைவில் அமல் ஊதியம், இதர படிகள் 23.5 சதவீதம் உயர்கிறது| மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் விரைவில் அமல்படுத்தப்படுகிறது. ஊதியம், இதர படிகள் 23.5 சதவீதம்உயர்த்தப்படுகிறது.
7-வது சம்பள கமிஷன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் மூலம் சம்பளம் மற்றும் இதர படிகள் மாற்றி அமைக்கப்படுகிறது. 6-வது சம்பள கமிஷன் சிபாரிசுகள், 2008-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டன.இதையடுத்து அமைக்கப்பட்ட 7-வது சம்பள கமிஷன், தனது சிபாரிசுகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அந்த சிபாரிசுகளை ஆய்வு செய்வதற்காக, மந்திரிசபை செயலாளர் பி.கே.சின்கா தலைமையில் செயலாளர்கள் குழுவை மத்திய அரசு அமைத்தது. அக்குழு, தனது ஆய்வை முடித்துக்கொண்டு, மத்தியநிதி அமைச்சகத்திடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்தஅறிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. மந்திரிசபை ஆலோசனை செயலாளர்கள் குழுவின் அறிக்கை அடிப்படையில், மந்திரிசபை குறிப்பு ஒன்றை மத்திய நிதி அமைச்சகம் தயாரித்துள்ளது.
அக்குறிப்பு, நாளை (புதன்கிழமை) நடக்கும் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் விவாதத்துக்கு வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என்றுதெரிகிறது. அதையடுத்து, 7-வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை மத்திய அரசு அமல்படுத்தும். ஜனவரி 1-ந் தேதி முதல், முன்தேதியிட்டு இது அமல்படுத்தப்படும் என்று நிதித்துறை செயலாளர் அசோக் லவாசா கூறினார். 23.5 சதவீத சம்பள உயர்வு சம்பளம், இதர படிகள் மற்றும் ஓய்வூதியத்தில் ஒட்டுமொத்தமாக 23.5 சதவீத உயர்வுக்கு 7-வது சம்பள கமிஷன் சிபாரிசு செய்திருந்தது. இதில் அடிப்படை சம்பளத்தை மட்டும் 14.27 சதவீதம் உயர்த்த சிபாரிசு செய்திருந்தது. இது, கடந்த 70 ஆண்டுகளில் மிகக்குறைந்த அளவாகும். தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆரம்பநிலை சம்பளம், ரூ.7 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம் (மந்திரிசபை செயலாளர் பெறுவது) ரூ.90 ஆயிரமாகவும் உள்ளது. இதை ஆரம்பநிலை சம்பளம் ரூ.18 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாகவும் உயர்த்த 7-வது சம்பள கமிஷன் சிபாரிசு செய்திருந்தது. இருப்பினும், இந்த சிபாரிசுகளை ஆய்வு செய்த செயலாளர்கள் குழு, ஆரம்பநிலை சம்பளத்தை ரூ.23,500 ஆகவும், அதிகபட்ச சம்பளத்தை ரூ.3 லட்சத்து 25 ஆயிரமாகவும் உயர்த்த சிபாரிசு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ரூ.1.02 லட்சம் கோடி கூடுதல் சுமை இந்த சம்பளம், இதர படிகள் மற்றும் ஓய்வூதியம் உயர்வால், சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 58 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள். இதனால், மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் கோடி கூடுதல் சுமை ஏற்படும். 7-வது சம்பள கமிஷனை அமல்படுத்த நடப்பு 2016-2017-ம் நிதி ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. இருப்பினும், இடைக்கால ஒதுக்கீடு என்ற பெயரில் பல்வேறு அமைச்சகங்களுக்கு ரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
No comments:
Post a Comment