மேல்நிலை பொதுத் தேர்வில் மறுமதிப்பீடு, மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 17-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிக்கை:
அண்மையில் நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்வெழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 8,33,682. இவர்களில் தேர்வு முடிவு கிடைக்கப்பெற்ற பிறகு மறுகூட்டலுக்கு 3,344 பேரும், மறு மதிப்பீடு கோரி 3,422 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த முடிவுகள் 17-6-2016 அன்று scan.tndge.in என்ற இணையதளத்தில் ஜூன் 17-ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். மதிப்பெண்ணில் மாற்றம் உள்ள மாணவர்களின் பதிவெண்கள் மட்டுமே இப் பட்டியலில் இருக்கும். இப் பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை. மதிப்பெண் மாற்றம் உள்ளவர்கள் அதற்கான புதிய மதிப்பெண் சான்றிதழை தங்கள் பள்ளித் தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியரிடம் வரும் ஜூன் 20-ஆம் தேதி பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment