ஏலகிரி அரசுப் பள்ளி மாணவர்கள், இருவர் எம்.பி.பி.எஸ்.,ல் சேர தகுதி பெற்றுள்ளனர். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, ஏலகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த சரத் என்ற மாணவரும், ரம்யா கிருஷ்ணன் என்ற மாணவியும் எம்.பி.பி.எஸ்., சேர தகுதி பெற்றுள்ளனர்.
மாணவர் சரத், 1,149 மதிப்பெண் பெற்று, மாவட்ட அரசுப் பள்ளி அளவில், முதலிடம் பிடித்திருந்தார். மாணவி ரம்யாகிருஷ்ணன், 1,146 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அரசுப் பள்ளி அளவில், மூன்றாம் இடம் பெற்றிருந்தார். இவர்கள், இருவரும் தற்போது அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர்.
கிராம பகுதியில் செயல்படும் ஓர் அரசுப் பள்ளியில் இருந்து, இரு மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த, இருவருக்கும், சி.இ.ஓ., மகேஸ்வரி மற்றும் ஏலகிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேல் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
2 comments:
Really great students
Really great students
Post a Comment