திருநெல்வேலி மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்கலாம்.
2015-16ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்ற முன்னாள் படைவீரரின் குழந்தைகளில் ஒருவருக்கு, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.5 ஆயிரம், இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 2015-16 ஆம் கல்வியாண்டில் 1,155 மற்றும் 1,140 மதிப்பெண் பெற்றவர்கள் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களைவிட அதிக மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரரின் குழந்தைகள் மதிப்பெண் பட்டியலுடன் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் வருகிற ஜூலை மாதம் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment