Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, June 16, 2016

    ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் மின் இணைப்பை துண்டிக்க நோட்டீஸ்: ஆசிரியர்கள் அதிர்ச்சி

    நெல்லை மாவட்டத்தில் பல ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் மின் கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதால் மின் இணைப்பை துண்டிக்க மின்வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கான மின் கட்டணம் கடந்த 9 மாதங்களாக செலுத்தப்படாமல் உள்ளது. இதனால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தில் இருந்து 24 மணி நேரத்திற்குள் மின் கட்டணத்தை செலுத்தவில்லையென்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக நாங்குநேரி ஒன்றியத்தில் முனைஞ்சிப்பட்டி, மூலைக்கரைப்பட்டி, இட்டமொழி மின்பகிர்மானத்திற்கு உட்பட்டசில பள்ளிகளில் மின் கட்டணம் பல மாதங்களாக செலுத்தப்படவில்லை.


    கீழப்பாவூர் ஒன்றியம், மேலப்பாவூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் மின் இணைப்பு கட்டணம் கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்டு முதல் 2016ம் ஆண்டு மே மாதம் 9 மாதங்களாக மின் கட்டணம் செலுத்தப்படவில்லை. மொத்தம் ரூ.2,832 நிலுவைத்தொகை உள்ளதாகவும் நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற 24 மணி நேரத்திற்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் சுந்தரபாண்டியபுரம் மின் வாரிய அலுவலகத்திலிருந்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இப்பள்ளிகள் இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலை நாளை 200ஆக குறைக்க வேண்டும்தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நெல்லை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடந்தது. செயலாளர் பால்ராஜ் வரவேற்றார். மாநில செயலாளர் மணிமேகலை முன்னிலை வகித்தார். கிளை செயலாளர்கள், வட்டார நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தனது ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும் மின் கட்டண நிலுவை உள்ள பள்ளிகளை கணக்கெடுத்து மின் இணைப்பை துண்டிக்கும் முன் மின் கட்டண நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நடப்பு கல்வியாண்டு முதல் கோடை வெயிலை கருத்தில் கொண்டும் மாணவர்கள் நலன் கருதியும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு வேலை நாட்களை 220லிருந்து 200 ஆக குறைக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    No comments: