Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, June 16, 2016

    கல்வி கட்டண நிர்ணய குழுதலைவரை நியமிக்க கோரிக்கை

    'தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்யும் குழுவின் தலைவரை நியமிக்க வேண்டும்' என, தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் நலச்சங்கம் சார்பில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமினிடம், மனு கொடுக்கப்பட்டு உள்ளது. மனுவில் கூறியிருப்பதாவது:


    தனியார் பள்ளிகளுக்கு, கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யும் குழு தலைவர் பதவி, ஏப்., 1ம் தேதியில் இருந்து காலியாக உள்ளது. எனவே, குழு தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும். தலைவர் நியமிக்கப்படும் வரை, பழைய கட்டணத்தை வசூலிக்க, தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட வேண்டும்.ஏழை மாணவர்களுக்கு, 25 சதவீதம் ஒதுக்கீடு வழங்காத, பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகள், செலவுகள் அனைத்தையும், பெற்றோரிடம் இருந்து வசூலிப்பதால், அவற்றை சுயநிதி பள்ளிகள் என அழைக்காமல், பெற்றோர் சார்பு பள்ளிகள் என, அழைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    No comments: