மதுரை மாவட்டத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.
பள்ளிக்கல்வி தேர்வுத் துறை இணை இயக்குனர் அமுதவள்ளி தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி முன்னிலை வகித்தார். 80 சதவீதம் மாணவர் தேர்ச்சி குறைந்த அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 80 ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.
கிராம பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்த நிலையில், நகர் பகுதி பள்ளிகளில் ஏன் தேர்ச்சி விகிதம் குறைந்தது, தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்காத காரணம் என்ன, மாணவர்களின் எதிர்காலத்திற்கான கல்வியில் ஆசிரியர்கள் பொறுப்பற்ற விதங்களில் நடக்கக்கூடாது என எச்சரித்ததோடு, விளக்கங்களும் கேட்கப்பட்டன.
கல்வி அலுவலர்கள் ரேணுகா, துரைப்பாண்டி, லோகநாதன் (பொறுப்பு), மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் அனந்தராமன், ஆதிராமசுப்பு பங்கேற்றனர்.
No comments:
Post a Comment