சத்துணவு மையங்களில் வழங்க, 950 டன் பயறு வகைகள் வாங்க, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில், மாணவர்களுக்கு, வேக வைத்த கருப்பு கொண்டை கடலை, பச்சை பயறு வகைகள், ஒருவருக்கு தலா, 20 கிராம் வழங்கப்படுகிறது. இவற்றை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்து, சத்துணவு மையங்களுக்கு சப்ளை செய்கிறது.
தற்போது, கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் துவங்கி உள்ளன. இதையடுத்து, 600 டன்கருப்பு கொண்டை கடலை; 350 டன் பச்சை பயறு வாங்கப்பட உள்ளது. இதன்மதிப்பு, ஐந்து கோடி ரூபாய். இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சத்துணவு மையங்களில் வழங்கப்படும் பயறு வகைகள், தரமற்று இருப்பதாக புகார்கள் வருகின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு, உயரதிகாரிகளிடம் அறிவுறுத்தியும், அலட்சியமாக உள்ளனர்' என்றார்.
No comments:
Post a Comment