அண்ணா பல்கலையின் தரவரிசை பட்டியல் மூலம், 191 கல்லுாரிகளின் செயல்பாடுகள், மோசமான நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கல்லுாரிகளுக்கு எச்சரிக்கை, 'நோட்டீஸ்' அனுப்ப, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான, 'கவுன்சிலிங்' நடத்தப்பட உள்ளது. இதையொட்டி, கல்லுாரிகளின் தரவரிசை பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின் படி, 191 கல்லுாரிகளின் தேர்ச்சி விகிதம், 50 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. இந்த கல்லுாரிகளில் படித்து, தோல்வி அடைந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.
இதுகுறித்து, உயர்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதேநிலை நீடித்தால், பல லட்சம் செலவு செய்து படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். எனவே, தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கவும், தேவையான பேராசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு, அந்த கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலை எச்சரிக்கை கடிதம் அனுப்ப உள்ளது. அதன் பின்னும் கல்வித் தரம் குறைந்தால், அந்த கல்லுாரிகளுக்கான இணைப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என, அண்ணா பல்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment