தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காலிப்பணியிடங்களுக்காக நடைபெறும் தேர்வுகளுக்கன, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இணயதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக நடத்தப்படும் இந்தத் தேர்வுகள் ஏற்கெனவே மே 22-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
இதையடுத்து ஜூன் 19, ஆகஸ்ட் 27, 28 தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் ஜூன் 19-ஆம் தேதி தட்டச்சர், இளநிலை தணிக்கையாளர், உதவி வரைவாளர் ஆகிய பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட அனுமதிசீட்டை (ஹால் டிக்கெட்) www.tangedcodirectrecruitment.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு 044- 2235 8311, 2235 8312 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment