இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்காக, 31.11 லட்சம், 'பஸ் பாஸ்' தயாரிக்கும் பணி, விரைவில் துவங்க உள்ளது.தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். இந்த ஆண்டு பஸ் பாஸ் தயாரிக்கும் பணி இன்னும் துவங்காததால், பழைய பஸ் பாசை மாணவர்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தங்கள் எல்லைக்கு உட்பட்ட போக்குவரத்து கழகங்களுக்கு நேரடியாகச் சென்று, விண்ணப்பங்களை பெற்று, அதில் மாணவர்களின் விவரங்களை பூர்த்தி செய்து தரும் பணியை, பள்ளி நிர்வாகங்கள் துவக்கி உள்ளன.
இந்த விண்ணப்பங்களின் அடிப்படையில், பஸ் பாஸ் தயாரிக்கப்படும். பாஸ் தயாரிக்கும் நிறுவனத்தை தேர்வு செய்ய, சென்னை தரமணியில் உள்ள சாலை போக்குவரத்து நிறுவனமான, ஐ.ஆர்.டி., 'டெண்டர்' கோரிஉள்ளது.அரசு விரைவு கழகத்தை தவிர்த்து, மற்ற, ஏழு போக்குவரத்து கழகங்களுக்கும், 31.11 லட்சம் பஸ் பாஸ் தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment