'மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது, அவர்களிடம் மொபைல் போனை கொடுத்து விடக்கூடாது,'' என பெற்றோருக்கு பள்ளிக்கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பள்ளிகளுக்கு மாணவர்கள் வரும்போது, பல பெற்றோர் தங்கள் பிள்ளையும், மொபைல் போன் பயன்படுத்த வேண்டுமென்ற ஆர்வத்தில், மொபைல் போன் கொடுத்து விடுகின்றனர். இது பல நேரங்களில் மாணவர்களுக்கு சிக்கலையும், ஆசிரியர்களுக்கு இடைஞ்சலையும் ஏற்படுத்துகிறது. எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் எந்த பள்ளியிலும் மாணவர்கள் மொபைல் போன் எடுத்து வர அனுமதிக்கக் கூடாது என, தலைமை ஆசிரியர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அனுப்பிய சுற்றறிக்கையின் படி, தலைமை ஆசிரியர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இதேபோல், மாணவர்கள் சைக்கிள் தவிர மோட்டார் பைக் போன்ற டூ - வீலர்களில் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி வந்தால், அந்த மாணவர்களின் டூ - வீலர் மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்து, பெற்றோரை அழைத்து எச்சரிக்கப்படும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment