பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, சான்றிதழில் பிழை திருத்த, கூடுதல் அவகாசம் தரப்பட்டுள்ளது.ஏப்ரலில் நடந்து முடிந்த, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, முதல் கட்டமாக, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழின் படி, மாணவர்களின் பெயர், பிறந்த தேதி போன்றவற்றில் ஏதாவது எழுத்து பிழை, எண் பிழை இருந்தால், அதை சரி செய்ய, இறுதி கட்ட வாய்ப்பு, பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்களின் பதிவேடு, மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றையும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழையும் சரிபார்த்து, அதில் பிழைகள் இருந்தால், அதை உடனடியாக தேர்வுத் துறைக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜூன், 13க்கு பின், 10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்பட உள்ளதால், அதற்கு மேல் மாற்ற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment