இன்று எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்பாகட்டும், இல்லை வங்கி பணி, ஐ.டி., பணியாகட்டும் திறமை வாய்ந்த நபர்களை தேர்ந்தெடுக்க ‘குழு விவாதம்’ முறை பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. ‘குழு விவாதம்’ என்பது அதிக அளவு பங்கேற்பாளர்களை கழித்து கட்ட ஒரு முறை என்று சிலர் நினைக்கின்றனர். அது ஒரு புறம் உண்மை என்றாலும், குழு விவாதம் பங்கேற்பாளரின் தலைமை பண்பு, குழு நிர்வாகம், ஒருங்கிணைத்தல், ஊக்கப்படுத்தும் திறன் போன்ற பல நிர்வாக திறன்களை வெளிக்கொணர்கிறது.
ஒரு குழு விவாதத்தில் செய்யகூடியது, செய்யக் கூடாததை பற்றி இனி காணலாம்.
* பொதுவாக குழு விவாதத்திற்கு ஒரு தலைப்பு கொடுக்கப்படும். அதை சரியாக புரிந்து கொண்டு அதை சார்ந்தே நமது பேச்சும் இருக்க வேண்டும்.
* பங்கேற்பாளர்கள் குழுமத்தில் எவர் முதலில் பேச்சை ஆரம்பிக்கின்றனரோ அவருக்கு தலைமை பண்பு இருப்பதாக கணித்து அதிக மதிப்பெண்கள் வழங்கப்படும்.
* அனைவரும் தங்கள் கருத்தை கூற ஆரம்பித்தவுடன் குழுவில் சலசலப்பு நேரலாம். அச்சமயம் நமது பண்பான கருத்தால் குழுமத்தை அமைதிப்படுத்தி நம் வழிக்கு கொண்டு வர முயல வேண்டும்.
* நாம் உபயோகிக்கும் வார்த்தைகளை கவனமாக கையாளவேண்டும். ஆபாசமோ, அராஜகமோ கூடாது.
* எந்த நிலையிலும் அவசியம் பேசி ஆக வேண்டுமே என்ற நிர்பந்தத்தில் எதுவும் பேச கூடாது. தெளிவாக புரிந்து கொண்டு மட்டும் பேச வேண்டும் .
* சாதாரண வார்த்தைகளையே உபயோகிக்க வேண்டும். தங்கள் ஆங்கில புலமையை காட்ட கடினமான ஆங்கில வார்த்தைகளை உபயோகப்படுத்த வேண்டாம்.
* தனிப்பட்ட மனிதர்களையோ, மதத்தையோ காயபடுத்தாமல் பேச வேண்டும். அடுத்தவரின் கருத்துக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும்.
பேசும் போது நமது உடல் மொழியில் கவனம் செலுத்துவது தேவை. நேராக நிமிர்ந்து உட்கார்ந்து பேச வேண்டுமே தவிர, தேவையற்ற அங்க அசைவுகளை தவிர்க்க வேண்டும்.
* குரலை உயர்த்தியோ, பதட்டமாகவோ, மெதுவாகவோ பேச கூடாது. முடிந்தவரை மேற்கோள் காட்டாமல், சுருக்கமாக பேசுதல் விரும்பத்தக்கது.
முக்கிய ‘டிப்ஸ்’:
* திறந்த வாய் மூடாமல் எப்பொழுதும் பேசிக்கொண்டே இருக்கக் கூடாது. அடுத்தவர் பேசும் போது குறிக்கிட்டு பேசக்கூடாது.
* பேசும் போது நடுவர்களை பார்க்கக்கூடாது. கூட்டத்தை மட்டும் பார்க்க வேண்டும்.
* முடிந்தவரை நாம் விவாதத்தை ஆரம்பித்து, முடியும் தருணத்தில் நம் கருத்தை கூறி முடித்தல் நலம்.
இவற்றை கடைபிடியுங்கள்; பிறகு என்ன, வெற்றி உங்களுக்கே!
-எம். விக்னேஷ்
No comments:
Post a Comment