இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் சில அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
அவை.
மூத்த குடிமக்களுக்கு கீழ் படுக்கை 50 சதவீதம் அதிகரிப்பு, இணையதள சேவை அதிகரிப்பு, ரயில் நிலையங்களில் வை-ஃபை வசதி அதிகரிப்பதும் பயணிகளுக்கு சிறந்த அறிவிப்புகளாகும்.
சிசிடிவி கேமரா வசதியை அதிகரிப்பதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.
அதே சமயம், தட்கல் முன்பதிவி சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பதும் சிறந்த துவக்கமாக அமையும்.
நீண்ட தூர ரயில்களில் முன்பதிவு செய்யாத 2 முதல் 4 பெட்டிகள் இணைக்கப்படும்.
ரயில் நிலையங்களில் தேவையானவர்களுக்கு வெந்நீர் வழங்கப்படும்.
ரயில் நிலைய ஓய்வறைகளை ஆன்லைனிலேயே புக் செய்யும் வசதி ஏற்படுத்தப்படும்.
முன்பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டை ரத்து செய்ய உதவி எண் 139 அறிமுகம் செய்யப்படும்.
பல்வேறு வசதிகள் கொண்ட ஸ்மார்ட் ரயில்கள் அறிமுகம் செய்யப்படும்.
முழுவதும் முன்பதிவு செய்யாத ரயில்கள் சாமான்ய மக்களுக்காக இயக்கப்படும்.
ரயில் பயணிகளின் பொழுது போக்குக்காக பெட்டிகளில் பண்பலை வானொலி வசதி ஏற்படுத்தப்படும்.
No comments:
Post a Comment