பிளஸ் 2 தமிழ், ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு பேசுதல், கேட்டல் செய்முறைத் தேர்வுக்கு 2013-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள உழைப்பூதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியது.
இதுகுறித்து ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் ஆ.ராமு, நிர்வாகிகள், நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி எஸ்.கோபிதாஸிடம் புதன்கிழமை அளித்த மனு விவரம்:
தமிழகம் முழுவதும் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகளுக்கும், தமிழ், ஆங்கில பாட பேசுதல், கேட்டல் செய்முறைத் தேர்வுகளுக்கும் தேர்வை நடத்தும் முதுநிலை ஆசிரியருக்கு ரூ.3.50 வீதம் உழைப்பூதியம் வழங்கப்பட்ட வேண்டும் என்ற அரசாணை உள்ளது.
ஆனால், 2013-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழ், ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு செய்முறைத் தேர்வுக்கான உழைப்பூதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே, உழைப்பூதிய நிலுவையை உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தற்போது நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பிளஸ் 2 பொதுத்தேர்வு அனைத்து பாட செய்முறைத் தேர்வுகளுக்கும் வழங்க வேண்டிய உழைப்பூதியத்தை முதுநிலை ஆசிரியர்களுக்கு நிலுவையில்லாமல் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment