10-ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு வரும் 29-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் காஜாமைதீன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் வரும் 29-ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 1-ஆம் தேதி வரை, அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெற உள்ளன.
பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள நேரடித் தனித் தேர்வர்கள், ஏற்கெனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வு எழுதி அத் தேர்வில் தேர்ச்சி பெறாத தனித் தேர்வர்கள், 29-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகளில் தவறாமல் கலந்து கொண்டு செய்முறைத் தேர்வை எழுதலாம்.
அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடைபெற உள்ள தேதி குறித்து அறிவியல் செய்முறை பயிற்சிப் பெற்ற பள்ளியிலிருந்து அறிவிப்பு ஏதும் முகவரிக்கு கிடைக்கப் பெறாதவர்கள், இதன் மூலம் தெரிந்துகொண்டு அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment