தமிழக சட்டசபையில் 2016-2017ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் நேற்று(16-02-2016) தாக்கல் செய்யப்பட்டது. நேற்று தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலையில், கல்விக்கு ரூ.24 ஆயிரத்து 820 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த 5 ஆண்டுகளில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்காக ரூ.86 ஆயிரத்து 193 கோடியும் மற்றும் உயர்கல்வியில் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை திரும்ப வழங்கும் திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 84 ஆயிரத்து 609 மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 544 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மாணவர்கள் கல்வி நிதி சுமை நீக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை தாக்கல் செய்தார்.
தற்போது ஒதுக்கப்பட்ட நிதி விவரம்
அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்கு ரூ.2 ஆயிரத்து 329.15 கோடி,
தேசிய இடைநிலை கல்வி இயக்கத்துக்கு ரூ.1,139.52 கோடி,
முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை திரும்ப வழங்கும் திட்டத்திற்கு ரூ.579 கோடி, மற்றும்
உயர் கல்விக்கு ரூ.3 ஆயிரத்து 821 கோடி மாநில சமூக வளர்ச்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment