பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அனைத்து வள மையப் பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை மாலை ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் பெ.மாங்கனி தலைமை வகித்தார். பொருளாளர் க.செந்தில்குமரன் வரவேற்றார். மாநில இணைச் செயலாளர் கோ.ரா.ரவிச்சந்திரன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி 1,385 ஆசிரியர் பயிற்றுநர்களை உடனடியாக பள்ளிக்கு மாற்றம் செய்ய வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்புவதன் மூலம் ஆசிரியர் பயிற்றுநர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள பணிச் சுமையைக் குறைக்க வேண்டும். கட்டாயப் பணி நிரவலில் வேறு மாவட்டங்களுக்குச் சென்றவர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.
No comments:
Post a Comment