விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான வினாத் தாள்கள் வியாழக்கிழமை வந்தடைந்தது. மாவட்டத்தில் உள்ள 6 மையங்களில் சீல் வைத்த அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வினாத்தாள்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வில் 75 மையங்களில் 24 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். அனைத்து பாடங்களுக்குரிய வினாத்தாள்களும் சென்னை அரசு தேர்வுகள் இயக்ககத்திலிருந்து விருதுநகர் சுப்பையாநாடார் மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய மையங்களில் சீல் வைக்கப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
No comments:
Post a Comment