பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 3வது பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலின் போது பெரும்பாலானோர்களால் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரிச்சலுகை அறிவிக்கப்பட்டது. அதாவது ஆண்டுக்கு ரூ5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளோருக்கு ரூ3,000 வரிசலுகை அறிவிக்கப்பட்டது.
இந்த வருமான வரி சலுகையால் ரூ5 லட்சத்துக்கும் குறைவான ஊதியம் பெறும் 1 கோடி பேர் பயனடைவர் -வணிக நிறுவனங்களுக்கான வரி 29% ஆக குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி 15 சதவீதமாக அதிகரிக்கபட்டுள்ளது. எனினும் மாத சம்பளம் பெருபவர்களுக்கான வருமான வரியில் மாற்றம் இல்லை
No comments:
Post a Comment