சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜெயலலிதா 110-வது விதியின்கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். சென்னையில் மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவைத் திட்டம் தொடங்கப்படும். இதன்படி மூத்த குடிமக்கள் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய பஸ் பாஸ் வழங்கப்படும்.
எனவே, 60 வயதுக்கு மேற்பட்டோர் மாநகர இணையதளத்தில் இலவச பஸ் பாஸ் பெறுவதற்கான விண்ணப்பத்தை பெறலாம். பேருந்து பணிமனைகளிலும் விண்ணப்பம் பெறலாம்.
பிப்ரவரி 24-ம்தேதி முதல் இத்திட்டம் அமல்படுத்தப்படும். மேலும் 10 இடங்களிலும் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் அறிவித்தார்.
No comments:
Post a Comment