அரசு பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கணினி அறிவியல் பாடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு அரசு பள்ளியிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்கி, நடைமுறைப்படுத்திட வேண்டும். அனைத்து அரசு பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடம் கற்பிப்பதற்கு கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும்.
அரசு மேல் நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். சமச்சீர் கல்வியில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இவர்களது நியாயமான கோரிக்கைகளை அரசு கருத்தில் கொண்டு நிறைவேற்றினால் மாணவர்களும், கணினி அறிவியல் ஆசிரியர்களின் குடும்பங்களும் பயன் பெறுவார்கள் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment