அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், வேறு தனியார் பள்ளிகளில் பகுதி நேர பணியில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என,மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கை:
அரசு பள்ளி ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் வகுப்பெடுக்க செல்லக்கூடாது என, அனைவருக்கும் கட்டாயக்கல்விச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பணியாளராக பணிபுரிந்து, அரசு ஊதியம் பெற்றுவரும் நிலையில், தனியார் பள்ளிகளில் பகுதிநேரமாக பணிபுரிவது, அரசு பணியாளர் நடத்தை விதிகளை மீறிய செயல்.
எனவே, சேலம் மாவட்டத்தில் அரசு, நகரவை, நிதியுதவி பெறும், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள்,ஆசிரியர்கள் ஆகியோர் தனியார் பள்ளிகளில் பணிபுரிவதாக கண்டறியப்பட்டால், அவர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment