10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வையொட்டி, தடையில்லா மின்சாரம் வழங்க மின் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் கோவிந்தராஜு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி கோட்டத்தில் முன்பருவ கால பராமரிப்பு, 12 மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை கவனத்தில் கொண்டு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 22-ஆம் தேதி மணவரானப்பள்ளி, கங்கோஜிகொத்தூர், எட்ரப்பள்ளி, ஆவல்நத்தம், கே.என்.பள்ளி,
சின்னகொத்தூர், நாச்சிகுப்பம், உலகம், உல்லட்டி, ஏனுசோனை, ஒசள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 8 மணி முதல் முற்பகல் 11 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். பிப்.23-ஆம் தேதி கெட்டூர், கீழ்மொரசிபட்டி, மேல்மொரசிப்பட்டி, அஞ்சாலம், ராமாபுரம், ஆலமரத்துப்பட்டி, பதிமடுகு, தீர்த்தம், நல்லூர் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், 24-ஆம் தேதி குப்பச்சிப்பறை, மாரசந்திரம், குருபரப்பள்ளி, காளிங்காவரம், கோடிப்பள்ளி, சூலாமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
வரும் 25-ஆம் தேதி காளிங்காவரம், பஸ்தலப்பள்ளி, செம்பரசனப்பள்ளி, சிம்பல்திராடி, வேப்பனஅள்ளி, பூதிமுட்லு, கே.கொத்தூர், கொங்கனப்பள்ளி, சிகரமானப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், 26, 27 ஆகிய தேதிகளில் பி.ஏ.துர்கம், சாமல்பள்ளம், பீர்பள்ளி, மேலுமலை, மல்லசந்திரம், பிக்கனப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், 29-ஆம் தேதி சூளகிரி, வேம்பள்ளி, போரிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment