ஏழை குடும்பத்தினருக்கு மானியத்தில் காஸ் வழங்கப்படும் என்றும், திறன் மேம்பாட்டின் படி வரும் 3 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு திறன் பயிற்சி அளிக்கப்படும் என்றும் கிராமப்புறங்களி்ல் 6 கோடி குடும்பங்களுக்கு டிஜிட்டல் கல்வி அறிவு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அணு மின் சக்தி உற்பத்திக்கு 3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் இன்றை பட்ஜெட் உரையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.வருமான வரி விலக்கில் எவ்வித மாற்றம் இல்லை என தெரிவித்தார். இவர் பட்ஜெட் தாக்கல் செய்து கொண்டிருந்த போது மும்பை பங்குச்சந்தை, கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது.
இன்றைய பட்ஜெட் உரையில் மேலும் அவர் கூறுகையில் ; உலக பொருளாதாரம் குலைந்த நிலையில் இந்திய பொருளாதாரம் சீராக உள்ளது , உலக வர்த்தகம் இந்தியா பொருளாதாரத்தை பாராட்டுகிறது , சர்வதேச நெருக்கடி இடையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. சவால்கள் வாய்ப்புகளாக மாற்றி முன்னேற்ற பாதைக்கு இந்தியாவை அழைத்து செல்வோம்.
நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 1. 4 சதவீதமாக இருக்கும்.நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளது . நடப்பு நிதி பற்றாக்குறை 3. 5 சதவீதமாக இருக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7. 6 சதவீதமாக உள்ளது. இந்திய பொருளாதாரத்திற்கு உலக வர்த்தக அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு 9 பிரிவுகளில் முழுக்கவனம் செலுத்தும் . இதன்படி , வேளாண் உற்பத்தி மற்றும் விவசாயிகளின் நலன் , கிராமப்புற வளர்ச்சி
மற்றும் இப்பகுதியில் வேலை வாய்ப்பு , சமூக நலத்திட்டம் , கல்வி மற்றும் மேக் இந்தியா திட்டம் மமூலம் திறன் வளர்ச்சி , அன்னிய முதலீடு பெருக்க திட்டம், நிதி துறையில் வெளிப்படையான தன்மை , வர்த்தக முன்னேற்ற திட்டம் ஆகிய 9 பிரிவுகளில் அரசு முழுக்கவனம் செலுத்தி முன்னேற்த்திற்கு பாடுபடும் என்றும் தெரிவித்தார்.
இன்றைய பட்ஜெட்டில் அருண்ஜெட்லி அறிவித்தவை ;
* மத்திய பட்ஜெட் மொத்த நிதி : 19. 78 லட்சம் கோடி
* நீர்வளமேம்பாட்டுக்கு 60 ஆயிரம் கோடி
* கிராமப்புற வளர்ச்சிக்கு 87 ஆயிரத்து 865 கோடி
* கிராம சதக் யோஜனா திட்டத்திற்கு 19 ஆயிரம் கோடி
* ஊரக மேம்பாட்டுக்கு
* விவசாய மேம்பாட்டுக்கு 35 ஆயிரம் கோடி
* உள்துறை வங்கிகளுக்கு ரூ. 25 ஆயிரம் கோடி
* உள் கட்டமைப்பு மேம்படுத்தி ரூ. 2 லட்சத்து 21 ஆயிரம் கோடி
* 75 லட்சம் பேர் காஸ் மானியத்தை விட்டு கொடுத்துள்ளனர்
* ஆதார் அட்டை தொடரும்
* உயர்கல்விக்கு நிதி வழங்க ஆயிரம் கோடியில் புதிய அமைப்பு
* நீர்ப்பாசன திட்டதற்கு 20 ஆயிரம் கோடி
* 50 ஆயிரம் கி.மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகளாக மாறும்
* சாலை திட்டத்திற்கு 97 , 000 கோடி
* எழு மின் இந்தியா திட்டத்திற்கு ரூ. 500 கோடி
* 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் நிலம் இயற்கை விவசாயத்திற்குள் கொண்டு வரப்படும் .
* 1, 500 பன்முகத்திறன் பயிற்சி மையம் அமைக்கப்படும்
* கிராமப்புற கட்டமைப்பு மேம்படுத்த திட்டம்
* சவால்களை வாய்ப்புகளாக மாற்றுவோம்
* மாநில அரசு துணையுடன் விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும்
* 2018 க்குள் அனைத்து கிராமங்களிலும் மின் வசதி
* பருப்பு விலை கட்டுப்படுத்த ரூ. 900 கோடி
* சிறு தொழி்ல முத்ரா திட்டத்திற்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி
* ஆர் பி ஐ
Advertisement
Click to run Flash
சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்வரி விதிப்பு மாற்றம் : * ஆண்டுக்கு ஒரு கோடிக்கு வருமானம் உள்ளவர்களுக்கு வரி உயர்வு
* புதிய நிறுவனம் துவங்குவோருக்கு 3 ஆண்டு வரி விலக்கு
* புகையிலை பொருட்கள் மீதான வரி 10 முதல் 15 சதவீதமாக உயர்வு
* வருமான வரி விலக்கில் மாற்றமில்லை
* வாடகை வீட்டில் வசிப்போருக்கு வரிச்சலுகை
*வருமான வரி விலக்கிற்கான வீட்டு வாடகை கழிவு ரூ. 24 ஆயிரத்தில் இருந்து ரூ. 60,ஆயிரமாக உயர்வு
*வரி வசூலிப்பை எளிமையாக்கவும், அதிகமாக்கவும் நடவடிக்கை
*ரூ. 5லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ளவர்களுக்கு
* வருமானவரி சட்டம் 87 பிரிவு ஏ யின் கீழ் வரிச்சலுகை
* ரூ.1 கோடி வருமான உள்ளவர்களுக்கு 15% வரி உயர்வு
* வரி வருவாய் கிராமப்புற வளர்ச்சிக்கு பயன்படும்
* அரசு உதவியுடன் 648 சதுர அடி வீடு கட்டுவோருக்கு வரிச்லுகைக்ஷ
* பெட்ரோல் கார் மீதான வரி ஒரு சதவீதம் உயர்வு
* கறுப்பு பணத்தை தாமாக முன்வந்து தெரிவிப்போருக்கு 45சதவீத வரி
* தேசிய ஓய்வூதிய திட்டத்தில் திரும்ப பெறும் தொகையில் 40 சதவீத வரி விலக்கு
* வீட்டு வாடகை கழிவு 24 ஆயிரத்தில் 60 ஆயிரமாக உயர்
* 50 லட்சத்திற்குள் வீடு வாங்குவோருக்கு வரிச்சலுகை
* 35 லட்சம் வீட்டுக்கடன்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரிக்கழிவு
* புகையிலை பொருட்களுக்கு 10 முதல் 15 சதவீத உயர்வு* மத்திய பட்ஜெட் மொத்த நிதி : 19. 78 லட்சம் கோடி
125 கோடி மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இன்றை பட்ஜெட் தேர்வு எழுத போவதாக நேற்றைய மன் கி பாத் ரேடியா நிகழ்ச்சியில் பேசுகையில் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.
முதல் ஆண்டு தேர்விலேயே பிரதமர் மோடி தோல்வி அடைந்து விட்டார் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லிகார் ஜூன் கார்கே விமர்சித்துள்ளார் .
No comments:
Post a Comment