நாடு முழுவதும் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு, 'குரூப் பி' மற்றும் 'குரூப் சி' பணியாளர்களை 'ஸ்டாப் செலக் ஷன் கமிஷன்' (எஸ்.எஸ்.சி.,) தேர்ந்தெடுக்க உள்ளது. பட்டதாரி நிலை ஒருங்கிணைந்த தேர்வுக்கு (சி.ஜி.எல்.,) இணையதளம் மூலம் மார்ச், 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.எஸ்.சி., சார்பில் விஜிலென்ஸ், ரயில்வே, வெளியுறவு, நிதி உள்ளிட்ட துறைகளில் துணை அலுவலர், இன்ஸ்பெக்டர், ஆடிட்டர் பதவிகளுக்காக பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பதவிகளை பொறுத்து, 18 முதல், 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மூலம் ஆட்-கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணமாக, 100 ரூபாய் செலுத்த வேண்டும். கட்டணம், வயது வரம்பில் எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சலுகை உண்டு. விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: www.ssconline2.gov.in அல்லது http://sscregistration.nic.in.
No comments:
Post a Comment